மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை


மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை
x

மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

துறையூர்:

துறையூறை அடுத்துள்ள கொல்லப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் நல்லுசாமி. கூலி தொழிலாளி. இவரது மனைவி அற்புதம்(வயது 60). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டின் பின்புறத்தில் உள்ள மாட்டுக்கொட்டகையில் அற்புதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி நல்லுசாமி கொடுத்த புகாரின்பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story