தூக்கில் பிணமாக தொங்கிய மூதாட்டி


தூக்கில் பிணமாக தொங்கிய மூதாட்டி
x

தஞ்சை ரெயில் நிலையம் பின்புறம் தூக்கில் பிணமாக தொங்கிய மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை ரெயில் நிலையத்திற்கு பின்புறம் உள்ள தண்ணீர் தொட்டி இரும்பு கம்பியில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்த சிலர், தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.அதில் பிணமாக கிடந்த மூதாட்டியை பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் அந்த மூதாட்டியின் உடலை போலீசார் கைப்பற்றி தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து புதுப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் பிரபாத் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை யாராவது கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story