போச்சம்பள்ளி அருகேவிஷபூச்சி கடித்து மூதாட்டி சாவு


போச்சம்பள்ளி  அருகேவிஷபூச்சி கடித்து மூதாட்டி சாவு
x
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்

போச்சம்பள்ளி தாலுகா வீராமலை காமராஜர் நகரை சேர்ந்தவர் காந்திமதி (வயது 76). சம்பவத்தன்று இவர் வீட்டின் முன்பு நின்று இருந்தபோது விஷபூச்சி கடித்தது. இதில் மயங்கி விழுந்த மூதாட்டியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story