மூதாட்டி சாவு
சங்கரன்கோவிலில் நாயகள் தள்ளி விட்டதில் காயம் அடைந்த மூதாட்டி இறந்தார்.
தென்காசி
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் காந்திநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் சுப்பையா மனைவி கருப்பி (வயது 75). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் வெளியே நடந்து சென்றார். அப்போது ஒன்றுக்கு மேற்பட்ட நாய்கள் தங்களுக்குள் சண்டை போட்டன. அப்போது நாய்கள் தள்ளி விட்டதில் மூதாட்டி கருப்பி பின் தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்தார். அவர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பி உயிரிழந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் கருப்பியின் மகன் சண்முகராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story