கார் மோதி மூதாட்டி சாவு
கார் மோதி மூதாட்டி உயிரிழந்தார்.
திருச்சி
ஜீயபுரம்:
பெட்டவாய்த்தலை அருகே உள்ள காமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரனின் மனைவி விஜயலட்சுமி(வயது 60). ராமச்சந்திரன் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இந்நிலையில் விஜயலட்சுமி, காமநாயக்கன்பாளையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்துவிட்டு, மாலையில் வீட்டிற்கு செல்வதற்காக திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றார். அப்போது குளித்தலை பகுதியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார், விஜயலட்சுமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி இறந்தார். இது குறித்து விஜயலட்சுமியின் மகள் சரண்யா(36) கொடுத்த புகாரின்பேரில் பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவத்தில் பெட்டவாய்த்தலை பகுதியை சேர்த்த அறிவழகனை(36) கைது செய்தனர்.
Related Tags :
Next Story