கார் மோதி மூதாட்டி சாவு
ஆறுமுகநேரியில் கார் மோதி மூதாட்டி பரிதாபமாக பலியானார்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி காணியாளா் தெருவைச் சோ்ந்த காளி மகன் காளிமுத்து (வயது 37). இவர் அடைக்கலாபுரம் சாலையில் மாட்டு இறைச்சிக் கடை வைத்துள்ளாா். நேற்று முன்தினம் காலையில் அவா் கடையிலிருந்து ஆறுமுகனேரி-திருச்செந்தூா் சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த காா் சாலையில் தாறுமாறாக ஓடிவந்து அவர் மீது மோதியது. மேலும் அந்த கார் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த 75 வயது மூதாட்டி மற்றும் 7 பேர் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூதாட்டி ரத்த வெள்ளத்தில் பலியானார். மேலும், காளிமுத்து, ராமகிருஷ்ணன் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் கிச்சை பெற்று வருகின்றனா். இதை தொடர்ந்து, காரை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் ஆத்தூர் தாயுமானவர் தெரு கடைவீதியை சோ்ந்த ரமேஷ் மகன் ராமகிருஷ்ணன் மீது ஆறுமுகனேரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேல்பாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான மூதாட்டி அப்பகுதியில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்தவர் என தெரிய வந்துள்ளது.