திராவகம் குடித்த மூதாட்டி சாவு


திராவகம் குடித்த மூதாட்டி சாவு
x

திராவகம் குடித்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை

சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி லட்சுமி (வயது 62). இவர், கடந்த 25 ஆண்டுகளாக மாத சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் சீட்டு கட்டியவர்கள் சரியாக பணம் கட்டாததால் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

லட்சுமி மாதந்தோறும் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்வதற்காக வருவது வழக்கம். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் 18-ந்தேதி சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். பின்னர் அவர் திருவண்ணாமலை அண்ணா நுழைவுவாயில் அருகில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் கழிவறை சுத்தம் செய்யும் இடத்தில் திராவகம்(ஆசிட்) குடித்து மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story