கண்பார்வை திறன் குறைந்த மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்து சாவு


கண்பார்வை திறன் குறைந்த மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்து சாவு
x

பெருந்துறை அருகே கண்பார்வை திறன் குறைந்த மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.

ஈரோடு

பெருந்துறை:

பெருந்துறை அருகே கண்பார்வை திறன் குறைந்த மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.

மூதாட்டி

பெருந்துறை சீனாபுரம் அருகே உள்ள கராண்டிபாளையம் பெரியகாடு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய தாயார் அம்மணியம்மாள் (வயது 79). இவருக்கு கண்பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்வதற்காக பெருந்துறை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையும் செய்துகொண்டார். ஆனாலும் முழுமையாக கண்பார்வை கிடைக்காமல் அம்மணியம்மாள் தடுமாறியபடியே இருந்து வந்துள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அம்மணியம்மாள் விட்டின் அருகே தடுமாறியபடி நடந்து சென்றுள்ளார். அப்போது கால் தவறி அந்த பகுதியில் இருந்த கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். 20 அடி அழமுள்ள அந்த கிணற்றில் 4 அடிக்கு தண்ணீர் இருந்தது. தண்ணீரில் அம்மணியம்மாள் தத்தளித்தபடி இருந்தார்.

சாவு

சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் உடனே பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி மூதாட்டியை மேலே கொண்டுவந்தார்கள். பின்னர் அவரை சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள்.

அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் அம்மணியம்மாள் இறந்துவிட்டார். இதுகுறித்து பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story