விஷம் தின்று முதியவர் தற்கொலை


விஷம் தின்று முதியவர் தற்கொலை
x

முத்துப்பேட்டை அருகே விஷம் தின்று முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருவாரூர்

முத்துப்பேட்டை;

முத்துப்பேட்டையை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் நாச்சிகுளம் கீழதெருவை சேர்ந்தவர் முகமதுகாசிம்(வயது72). இவர் நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாா். இதனால் மனமுடைந்த அவா் வீட்டில் இருந்த பூச்சுக்கொல்லி மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். இதனால் அவரை குடும்பத்தினர் மீ்ட்டு சிகிச்சைக்காகதிருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் முகமதுகாசிம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story