முதியவருக்கு கத்திக்குத்து
நாச்சியார்கோவில் அருகே முதியவரை கத்தியால் குத்திய மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவிடைமருதூர்;
கும்பகோணம் அருகே உள்ள விசலூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது60). இவருடைய மகன் ராமச்சந்திரன்(20). ராமச்சந்திரனுக்கு திருமணமாகிவிட்டதால் தனது தந்தையிடம் தனக்கு தனியாக வீடு வேண்டும் என கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது இதில் தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் வீட்டிலிருந்த புல் அறுக்கும் கத்தியை எடுத்து தந்தையின் முதுகில் குத்தியதாக தெரிகிறது. இதில் கத்தி உடைந்த நிலையில் முதுகில் சொருகி இருந்தது. இதனால் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு மோகன்தாஸ் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை செய்து கத்தியை வெளியில் எடுக்க வேண்டி உள்ளதால் மேல் சிகிச்சைக்காக அவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து நாச்சியார் கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.