இறந்து கரை ஒதுங்கிய ஆலிவர் ரெட்லி ஆமைகள்
ஆலிவர் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின
வேதாரண்யம் பகுதியில் கடல் உள்வாங்குவதும், பிறகு சகஜ நிலைக்கு திரும்புவதும் அடிக்கடி நடக்கிறது. சில நேரங்களில் கடல் 3 கிலோமீட்டர் தூரம் வரை உள்வாங்குகிறது. இதன் காரணமாக கடற்கரை சேறாக மாறி விடுகிறது. முட்டையிட வரும் அரிய வகை ஆலிவர் ரெட்லி ஆமைகள் இந்த சேற்றில் சிக்கி இறந்து விடுகின்றன. இந்த நிலையில் நேற்று மாலை வேதாரண்யம் கடற்கரையில் 3 ஆலிவர் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. அவற்றை கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப் கான் தலைமையிலான வனத்துறையினர் புதைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire