சாலையோரம் நின்ற லாரி மீது ஆம்னி பஸ் மோதல்; 7 பேர் படுகாயம்
மதுராந்தகம் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது ஆம்னி பஸ் மோதியதில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை
திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி ஆம்னி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. நேற்று காலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த பாக்கம் என்ற இடத்தில் வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில் ஆம்னி பஸ்சின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த 4 பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த மதுராந்தகம் போலீசார், விபத்தில் காயம் அடைந்தவர்களை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story