ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்து; 6 பேர் காயம்


ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்து; 6 பேர் காயம்
x

ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்து; 6 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே மருதூர் பொன்பரப்பியை சேர்ந்தவர் டிரைவர் செல்வக்குமார் (வயது 49). இவரது மனைவி சுமதி (41) மற்றும் கோகிலா (38), மோனிஷா (12), வர்ணீஷ் (8), மகேஷ் (12). இவர்கள் 6 பேரும், சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டிக்கு ஆம்னி வேனில் புதுக்கோட்டை- அரசமலை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். கீரங்குடி பகுதியில் வந்த போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுபாட்டை இழந்து ஆம்னி வேன் சாலையிக் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த 6 பேரும் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்த 6 பேரையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story