100 அடி உயர கம்பத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. கொடி ஏற்றினார்
பரமக்குடி, மஞ்சூர் பகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 100 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடி ஏற்றினார்.
பரமக்குடி,
பரமக்குடி, மஞ்சூர் பகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 100 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடி ஏற்றினார்.
உற்சாக வரவேற்பு
ராமநாதபுரத்தில் நேற்று தி.மு.க. பாக முகவர்கள் கூட்டம் நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) மண்டபத்தில் மீனவர்கள் மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மாவட்ட எல்லையான மரிச்சுக்கட்டியில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் புத்தகம் கொடுத்து வரவேற்றார். அவரை தொடர்ந்து அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் ஆகியோரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் பரமக்குடி பகுதியில் வந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு சாலையின் இருபுறமும் பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்களை பார்த்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் மகிழ்ச்சியுடன் கை அசைத்து சென்றார்.
நகர்மன்ற தலைவர்
பரமக்குடி ஐந்து முனைப்பகுதியில் பரமக்குடி நகர் மன்ற தலைவரும் தெற்கு நகர் செயலாளருமான சேது கருணாநிதி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி நினைவுப் பரிசு வழங்கினார்.
பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரிய மாநில முதல் நிலை ஒப்பந்ததாரர் சிவசுந்தரம், 29-வது வார்டு நகர்மன்ற உறுப்பினரும் திட்டக்குழு உறுப்பினருமான அமுதா ராணி, குடிநீர் வடிகால் வாரிய மாநில முதல் நிலை ஒப்பந்ததாரர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முதல்-அமைச்சருக்கு நினைவு பரிசு வழங்கினர்.
அதைத்தொடர்ந்து பரமக்குடி அடுத்து உள்ள உலகநாதபுரத்தில் இருக்கும் மகால் ஒன்றில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறிது நேரம் அமர்ந்து தேநீர் அருந்தினார்.
100 அடி கொடி கம்பத்தில்..
பின்பு அங்கிருந்து புறப்பட்டு நென்மேனி அருள்நகரில் பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி கொடி கம்பத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிமோட் மூலம் தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார். அப்போது முதல்-அமைச்சருக்கு முருகேசன் எம்.எல்.ஏ. நினைவு பரிசு வழங்கி வரவேற்றார். அவரது சகோதரர்கள் கணேசன் பராசக்தி, ஒன்றிய கவுன்சிலர் நதியா மனோகரன், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற பரமக்குடி ஒன்றிய செயலாளர் துரைமுருகன் கனிமொழி, டாக்டர் ஜெயபிரகாஷ் ஆகியோரும் நினைவு பரிசு வழங்கினர்.
பின்பு மஞ்சூரில் போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் குணசேகரன் ஏற்பாட்டில் அமைக்கபட்டிருந்த கொடிமரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றினார். அதே சமயம் ஒன்றிய செயலாளர் வக்கீல் குணசேகரன், போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்யா குணசேகரன், துணைத்தலைவர் வக்கீல் பூமிநாதன் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர். கிழக்கு ஒன்றிய செயலாளர் கதிரவன் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்திலும் கொடியேற்றினார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சியில் போகலூர் மேற்கு ஒன்றிய துணைச்செயலாளர் கனகராஜ், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் கார்த்திக் பாண்டியன், பொட்டி தட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், டி.கருங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சிவசுப்பிரமணி, மாவட்ட அயலக அணி அமைப்பாளர் பன்னீர்செல்வம், நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் சக்தி, பரமக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் அருளாந்து, செவ்வூர் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா சின்னாள், போகலூர் கூட்டுறவு சங்க தலைவர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் அரி. ராமபாண்டி, பரமக்குடி நகர் மாணவரணி அமைப்பாளர் மகேந்திரன், பரமக்குடி வடக்கு நகர் பொருளாளர் மனோகரன், மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன், பரமக்குடி அனுமார் கோவில் பொறுப்பாளர் இளையராஜா, நகர் மன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.நகை மாளிகை சதீஷ்குமார், தேவகிட்டு, அப்துல் மாலிக், ஜீவரத்தினம், பாக்கியராஜ், பரமக்குடி நகர் தெற்கு அவைத்தலைவர் நஸ்ருதீன், துணைச் செயலாளர்கள் மும்மூர்த்தி, வேலன், மோகனா, பொருளாளர் ஜானகிராமன், 36-வது வார்டு செயலாளர் தங்க மோகன்ராஜ் ஆகியோர் கலந்து ெகாண்டனர்.
நகர் வர்த்தக அணி துணை அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி, 34-வது வார்டு செயலாளர் ஸ்ரீஹரிஹரன், 33-வது வார்டு செயலாளர் சந்தை வீரபாண்டியன், முன்னாள் நகர் பொறுப்புக்குழு உறுப்பினர் கலீல் ரகுமான், 29-வது வார்டு செயலாளர் கருணாநிதி, 25-வது வார்டு செயலாளர் முத்துப்பாண்டி, 22-வது வார்டு செயலாளர் லண்டன் ரமேஷ், பாம்பூர் வேலுச்சாமி, பரமக்குடி முன்னாள் ஒன்றிய துணை தலைவர் பார்த்திபனூர் சேது தினகரன், மாவட்ட பிரதிநிதி வேந்தோணி துரைராஜ், வே.முத்து செல்லாபுரம் ஒன்றிய இளைஞரணி ஜெயசீலன், பரமக்குடி நகர் இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாண்டியன், வேந்தோணி ஊராட்சி தகவல் தொழில்நுட்ப துறை ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.