குடும்ப பிரச்சினையில் தீக்குளித்த இளம்பெண் சாவு
சின்னமனூரில் குடும்ப பிரச்சினையில் தீக்குளித்த இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
தேனி
சின்னமனூர் காந்தி நகர் காலனியை சேர்ந்தவர் சரண்ராஜ். இவரது மனைவி சசி பிரபா (வயது 28). கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 3-ந்தேதி 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சசி பிரபா வீட்டில் யாரும் இல்லாதபோது தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
இதில் வலியால் அலறி துடித்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story