மொபட் மீதுலாரி மோதி தம்பதி படுகாயம்


மொபட் மீதுலாரி மோதி தம்பதி படுகாயம்
x
தினத்தந்தி 5 Sept 2023 12:15 AM IST (Updated: 5 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டி அருகே மொபட் மீது லாரி மோதிய விபத்தில் தம்பதி படுகாயம் அடைந்தனர்.

தேனி

தேவதானப்பட்டி அருகே உள்ள நல்லகருப்பன்பட்டி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் அந்தோணியார் (வயது 70). இவரது மனைவி ஷீலா. நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவரும் பெரியகுளத்தில் இருந்து மொபட்டில் நல்லகருப்பன்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். மொபட்டை அந்தோணி ஓட்டினார்.

பெரியகுளம்-வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் நல்லகருப்பன்பட்டி பிரிவு அருகே ஊருக்குள் செல்வதற்காக மொபட்டை திருப்பினார். அப்போது அந்த வழியாக வந்த லாரி, இவர்கள் சென்ற மொபட் மீது மோதியது. இதில் கீழே விழுந்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story