கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிளில்ரூ.6 லட்சம் திருடிய 2 வாலிபர்கள் கைது


தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிளில் ரூ.6 லட்சம் திருடிய 2 வாலிபர்கள் கைது

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் தனியார் நிறுவன மேலாளரின் மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்திருந்த ரூ.6 லட்சத்தை திருடிச் சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது ெசய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 52 ஆயிரம் மீட்கப்பட்டது. மேலும் தலைமறைவாக உள்ள அவர்களின் கூட்டாளியை போலீசார் தேடிவருகின்றனர்.

தனியார் நிறுவன மேலாளர்

கோவில்பட்டியை அடுத்த மந்தித்தோப்பைச் சேர்ந்த ஷேக்முஹம்மது மகன் செய்யது முஹம்மதுபுஹாரி (வயது37). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த டிச.13-ந்தேதி எட்டயபுரம் சாலையில் உள்ள ஒருவங்கியில் இருந்து ரூ.6 லட்சம் பணத்தை எடுத்துள்ளார். அந்த பணத்தை மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்து கொண்டு புறப்பட்டு ெசன்றார்.

பின்னர் பிரதான சாலையில் உள்ள கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்க சென்றார். சிறிது நேரத்தில் பொருளை வாங்கிவிட்டு திரும்பி வந்த அவர் மோட்டார் சைக்கிளில் நிறுவனத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் பெட்டியை திறந்து பார்த்த போது, அதிலிருந்த ரூ.6 லட்சம் திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து செய்யது முகமது புகாரி கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து கிழக்கு போலீஸ் நிலைய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

வாலிபர்கள் கைது

இந்நிலையில் கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி தலைமையில் போலீசார் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் தனித்தனியாக வந்த இரு வாலிபர்கள் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த மோட்டார் சைக்கிள்களை சோதனை செய்தபோது, ரூ.4 லட்சத்து 52 ஆயிரம் இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் சென்னை வில்லிவாக்கம் வேப்பம்பேட்டைச் சேர்ந்த தேவதாஸ்பிரபு மகன் சக்கரையா(29) மற்றும் வில்லிவாக்கம் இந்திரா நகர் குறுக்குத் தெருவைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் பிரசாந்த் என்ற கவுதம் என்ற சின்னா(26) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள், கூட்டாளியான அபி என்ற பிரான்சிஸ் என்பவருடன் சேர்ந்து முஹம்மது புஹாரி மோட்டார் சைக்கிளில் இருந்து பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் அந்த திருட்டு வழக்கில் சக்கரையா, பிரசாந்த் ஆகிய 2பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 2 மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.4 லட்சத்து 52 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இவ்வழக்கில் ெதாடர்புடைய அபியை தேடிவருகின்றனர்.


Next Story