மோட்டார்சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது


மோட்டார்சைக்கிளில்   கஞ்சா கடத்திய 2 பேர் கைது
x

பர்கூரில் மோட்டார்சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

ஈரோடு

அந்தியூர்

பர்கூரில் மோட்டார்சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

கஞ்சா

பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் தமிழ்நாடு-கர்நாடக எல்லை பகுதியில், கர்நாடக மாநில சோதனை சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்கள்.

அப்போது மோட்டார்சைக்கிளில் 2 பேர் சந்தேகப்படும் வகையில் வந்தார்கள். உடனே போலீசார் மோட்டார்சைக்கிளை நிறுத்தி அவர்களிடம் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் 2 பேரிடமும் 850 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

2 பேர் கைது

இதையடுத்து 2 பேரிடமும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் பர்கூர் மலைப்பகுதியை சேர்ந்த மாதவன் (வயது 52), சின்னப்பி (32) ஆகியோர் என்பதும், இருவரும் கர்நாடகா மாநிலம் ராமாபுரத்தில் இருந்து கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரிந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, கஞ்சாவையும், மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தார்கள்.


Next Story