மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலி


மோட்டார்சைக்கிள் மீது   கார் மோதி தொழிலாளி பலி
x

வீரபாண்டி அருகே ேமாட்டார்சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலியானார்

தேனி

சின்னமனூர் அருகே உள்ள கரிச்சிபட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 38) கூலித்தொழிலாளி. இவர், தேனியில் இருந்து கரிச்சிப்பட்டிக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வீரபாண்டியை அடுத்த கோட்டூர் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்தபோது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது ேமாதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி விஜயா கொடுத்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் காரை ஓட்டி வந்த மதுரை அருகே உள்ள நாகமலைபுதுக்கோட்டையை சேர்ந்த ராஜாராம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story