ஆகஸ்டு 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி கரையில் நின்று விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


ஆகஸ்டு 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி கரையில் நின்று விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

ஆகஸ்டு 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி கரையில் நின்று விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஈரோடு

பெருந்துறை

ஆகஸ்டு 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி கரையில் நின்று விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தண்ணீர் திறக்கப்படுமா?

ஈரோடு மாவட்டத்தில் முக்கிய நீர்ப்பாசன வாய்க்காலாக இருக்கும் கீழ்பவானி வாய்க்காலில் தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த சீரமைப்பு பணி நடைபெறும்போது வாய்க்கால் கரையோரத்தில் கான்கிாீட் அமைக்க கூடாது என்று ஒரு தரப்பு விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் வாய்க்கால் கரையோரங்களில் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால், இந்த ஆண்டு குறிப்பிட்டபடி தண்ணீர் திறக்கப்படுமா? என்ற சந்தேகம் விவசாயிகளிடையே எழுந்துள்ளது.

ஆர்ப்பாட்டம்

இந்தநிலையில் நேற்று பெருந்துறையில் இருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் வாய்க்கால்மேடு கருக்கம்பாளையம் என்ற இடத்தில், கீழ்பவானி வாய்க்கால் கரையில் நின்று விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆகஸ்டு 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்ற கோரிக்கை விடுத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் கோரிக்கை குறித்து கோஷம் எழுப்பினர். மேலும் கோரிக்கை வாசகங்கள் எழுதிய பதாகைகளையும் கைகளில் ஏந்தி இருந்தனர்.


Related Tags :
Next Story