ஆறுமுகநேரி பால்ஸ் பப்ளிக் ஸ்கூல் சார்பில் மாதிரி நுழைவுத் தேர்வு
ஆறுமுகநேரி பால்ஸ் பப்ளிக் ஸ்கூல் சார்பில் மாதிரி நுழைவுத் தேர்வு நடந்தது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி பெர்ல்ஸ் பப்ளிக் ஸ்கூல் இணை நிறுவனமான பெர்ல்ஸ் அகாடமி மற்றும் ரீச் அகாடமி ஆகியவை இணைந்து மாணவ, மாணவியருக்கு பிளஸ்-2 படித்த பின்பு மருத்துவம் மற்றும் பொறியியல், பட்ட படிப்புகளை படிக்க அத்தியாவசிய தேவையான நீட் மற்றும் ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுகளை எழுது வதற்கான மாதிரி நுழைவுத் தேர்வை நடத்தினர்.
இதன் தொடக்கமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறுமுகநேரி பெர்ல்ஸ் பப்ளிக் ஸ்கூல், சாத்தான்குளம் அருகிலுள்ள சாலைப்புதூர் ஏக ரட்சகர் சபை மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி செயின்ட் மேரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நேற்று முன்தினம் இந்த இலவச மாதிரி நுழைவுத் தேர்வை நடத்தினர்.
இதனை பெர்ல்ஸ் பப்ளிக் ஸ்கூல் சேர்மன் பி. சுப்பையா, பெர்ல்ஸ் அகடமி சேர்மன் எஸ் மபத்லால், அகடமி நிர்வாகி சீனிவாசன், ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். தேர்வில் பங்கேற்றவர்களுக்கு மாதிரி நுழைவு தேர்விற்கான வினாக்கள் பட்டியல் வழங்கப்பட்டது.