போத்தீஸ் சார்பில் கிறிஸ்மஸ் இன்னிசை நிகழ்ச்சி


போத்தீஸ் சார்பில்   கிறிஸ்மஸ் இன்னிசை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 7 Dec 2022 12:15 AM IST (Updated: 7 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாசரேதித்ல் போத்தீஸ் சார்பில் கிறிஸ்மஸ் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி

நாசரேத்:

நாசரேத் காமா ஊழியங்கள் சார்பில் போத்தீஸ் நிறுவனம் ஏற்பாட்டில் கிறிஸ்துமஸ் இன்னிசை நிகழ்ச்சி நாசரேத் கத்தீட்ரல் வளாகத்தில் நடைபெற்றது. கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்ற தலைவர் வெல்ற்றன் ஜோசப் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். தலைமை குருவானவர் மர்காஷிஸ் டேவிட் வெஸ்லி தலைமை தாங்கினார். உதவி குருவானவர் பொன் செல்வின் அசோக்குமார் முன்னிலை வகித்தார். வி.ஜி. பி.குழுவினரின் 40 இசைக்கலைஞர்களைக் கொண்டு கிறிஸ்துமஸ் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இடையே வேதாகமத்திலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை காமா ஸ்தாபகர் பி.ஆர்.சாமுவேல், தலைவர் பில்லிகிரஹாம், செயலர் ஜெபின், பொருளாளர் மேஷாக் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


Next Story