டி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில்நாட்டு நலப்பணி திட்ட முகாம்


டி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில்நாட்டு நலப்பணி திட்ட முகாம்
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது.

தேனி

ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது. இதையொட்டி பள்ளியில் படிக்கும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டனர். அதன்படி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார பணிகளை மேற்கொண்டனர். அங்கன்வாடி மையத்தின் முன்பு வளர்ந்திருந்த புதர்களை அப்புறப்படுத்தினர். மேலும் மாணவர்களுக்கு யோகா, உடற்பயிற்சி மற்றும் சுகாதார பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story