டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில்பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டது


டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில்பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டது
x

கோவில்பட்டியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டது

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு தர்பூசணி பழத் துண்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நற்பணி மன்ற மாவட்ட துணை தலைவரும், நகரசபை கவுன்சிலருமான ஜீ.தவமணி தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு தர்பூசணி பழத்துண்டுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மன்றத்தின் வேலாயுதபுரம் கிளை தலைவர் ஏ.முருகன், 14-வது வார்டு தி.மு.க. செயலாளர் கே.தங்கமாரியப்பன், வார்டு பிரதிநிதி ஆர்.பன்னீர்செல்வம், நிர்வாகிகள் மகேஸ்வரி, தமிழ்செல்வி, வரலட்சுமி, கனகா, சேர்மக்கனி, தங்கராஜ், மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story