கரூர் செட்டிநாடு சிமெண்டு ஆலை சார்பில் தாலுகா அலுவலகத்திற்கு உபகரணங்கள் வழங்கல்
கரூர் செட்டிநாடு சிமெண்டு ஆலை சார்பில் தாலுகா அலுவலகத்திற்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்திற்கு வரும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், கரூர் செட்டிநாடு சிமெண்டு ஆலை கரிக்காலி மூலம் சமூக பொறுப்புணர்வு நிதியில் இருந்து ரூ.1.50 லட்சம் மதிப்பில் 2 கணினிகள், 2 யு.பி.எஸ். மின்கலன்கள், 2 வண்ண அச்சு பொரிகள் ஆகியவற்றை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் செட்டிநாடு சிமெண்டு ஆலையின் தலைவர் கிருஷ்ணன் மற்றும் பொது மேலாளர் ரமேஷ், திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டு, பொருட்களை கடவூர் தாசில்தார் முனிராஜ் மற்றும் துணை தாசில்தார் இளம்பரிதி ஆகியோரிடம் வழங்கினர். இதனை அடுத்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு புலியூரில் அமைந்துள்ள செட்டிநாடு சிமெண்டு ஆலையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் ஆலையின் தலைவர் ஹரி கிஷோர் கலந்து கொண்டு, மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் சுற்றுச்சூழல் குறித்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.