குள்ளப்புரம் வேளாண்மை கல்லூரி சார்பில்விவசாயிகளுக்கு பயிற்சி


குள்ளப்புரம் வேளாண்மை கல்லூரி சார்பில்விவசாயிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 29 Dec 2022 12:15 AM IST (Updated: 29 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குள்ளப்புரம் வேளாண்மை கல்லூரி சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தேனி

தமிழக வேளாண்மை-உழவர் நலத்துறை, மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் (அட்மா) கீழ் பயிர்களில் படை புழு தாக்குதல் குறித்து போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, குள்ளபுரம் வேளாண்மை கல்லூரி சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண்மை கல்லூரி 4-ம் ஆண்டு மாணவிகள் கலந்து கொண்டு, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, பயிர்களில் படை புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை, இன கவர்ச்சி பொறி அமைப்பதற்கான வழிமுறைகள், அதற்கான வேதியியல் கட்டுப்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் கொடுத்தனர். இதில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story