நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் சார்பில் திருச்செந்தூரில் ஆவணி திருவிழா 10-ம் நாள் மண்டகப்படி
நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் சார்பில் திருச்செந்தூரில் ஆவணி திருவிழா 10-ம் நாள் மண்டகப்படி நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா 10-ம் திருநாள் மண்டகப்படி நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் சார்பில், திருச்செந்தூர் சன்னதி தெருவில் உள்ள சங்க மண்டபத்தில் வைத்து நடந்தது. மேலக்கோவிலில் இருந்து அழைத்து வரப்பட்ட சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி-அம்பாள் மேலக்கோவிலுக்கு சென்றனர். பின்னர் சங்கம் சார்பில், கோவில் வளாகத்தில் தெய்வீக கானங்கள் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக திருச்செந்தூர் நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள காமராஜர் சிலைக்கும், வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கும் நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார், செயலாளர் டி.ராஜகுமார் நாடார், பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள், நிர்வாகசபை உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.