சாகுபுரம் சீனியர் செகண்டரி பள்ளி சார்பில் ஆதரவற்ற முதியோர், குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி
சாகுபுரம் சீனியர் செகண்டரி பள்ளி சார்பில் ஆதரவற்ற முதியோர், குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
ஆறுமுகநேரி:
சாகுபுரம் கமலாவதி சீனியர் செகண்டரி பள்ளி சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், பள்ளி மாணவர்களுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக பள்ளி மாணவ, மாணவியர் உணவு பொருடகள், ஆடைகள், குழந்தைகளுக்கான உணவு, கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சேகரித்து வைத்திருந்தனர்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆறுமுகநேரி சீனந்தோப்பில் உள்ள லைட் முதியோர் இல்லத்திற்கும், அடைக்கலாபுரத்தில் உள்ள புனித சூசை அறநிலையத்தில் உள்ள முதியோர்கள், மற்றும் மாணவ- மாணவியர்களுக்கும், வீரபாண்டியன்பட்டணத்தில் உள்ள கருணாலாயத்திற்கும், திருச்செந்தூரில் உள்ள அன்பு இல்லத்தில் உள்ள மாணவ, மாணவிகளுக்கும் அவரவர் தேவைகளுக்கு ஏற்றவாறு வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி் முதல்வர் எஸ். அனுராதா, தலைமை ஆசிரியர் இ. ஸ்டீபன் பாலாசீர், பள்ளி நிர்வாகி் வெ. மதன், மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உடன் சென்றிருந்தனர்.