தூத்துக்குடியில் காங்கிரஸ் சார்பில்தண்ணீர் பந்தல் திறப்பு
தூத்துக்குடியில் காங்கிரஸ் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
தூத்துக்குடி
தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர், ஐ.என்.டி.யு.சி மாநில பொது செயலாளர் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள்சாமி தலைமை தாங்கி நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி, அமைப்பு சாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் டி.ஜெயக்கொடி, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துவிஜயா, டி.சி.டி.யு மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், எஸ்.சி. பிரிவு மாவட்ட தலைவர் ராஜாராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story