கிரிக்கெட் சங்கம் சார்பில்பந்து வீச்சு பயிற்சி


கிரிக்கெட் சங்கம் சார்பில்பந்து வீச்சு பயிற்சி
x
தினத்தந்தி 17 Feb 2023 12:15 AM IST (Updated: 17 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

தேனி

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், தேனி, திண்டுக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 14 முதல் 24 வயது வரையுள்ள இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்து மாநில மற்றும் தேசிய அளவில் பங்குபெறும் வகையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன்படி, வருகிற மார்ச் மாதம் 11-ந்தேதி வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், 12-ந்தேதி சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் பயிற்சி திண்டுக்கல்லில் நடக்கிறது. இந்த தேர்வில் பங்கேற்க விருப்பம் உள்ள தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களின் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு நகலோடு வருகிற 26-ந்தேதி காலை 10 மணியளவில் தேனி கே.ஆர்.ஆர். நகரில் உள்ள மேனகா மில்ஸ் வலைப்பயிற்சி மைதானத்தில் பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும். இத்தகவலை தேனி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் மணிவண்ணன் தெரிவித்தார்.


Related Tags :
Next Story