இந்து அன்னையர் முன்னணி சார்பில்சிறப்பு கூட்டு பிராத்தனை
உடன்குடி அருகே இந்து அன்னையர் முன்னணி சார்பில் சிறப்பு கூட்டு பிராத்தனை நடந்தது.
தூத்துக்குடி
உடன்குடி:
உடன்குடி அருகே செம்மறிகுளம் ஊராட்சி ராமசுப்பிரமணியபுரத்தில் இந்து அன்னையர்முன்னணி சார்பாக மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழவும், நல்ல மழை பொழிய வேண்டியும், , உலக நன்மைக்காகவும், சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைவி சூரியகலா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சிங்காரக்கனி, துணைத்தலைவி மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர், செயலாளர்கள் தமிழ்ச்செல்வி அமுதசுரபி, பூஜா, பத்திரகாளி, லெட்சுமி சுயம்புகனி, ஒன்றிய செயலாளர் சித்ரா, மாவட்ட தலைவி சந்தனக்கனி, இந்து அன்னையர் முன்னணியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாள ர் கேசவன் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பிரசாரம் செய்தார். இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story