தமிழ் வளர்ச்சித்துறை சார்பில்பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி


தமிழ் வளர்ச்சித்துறை சார்பில்பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி
x
தினத்தந்தி 28 Sept 2023 12:15 AM IST (Updated: 28 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடக்கிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவர்கள், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்கு அக்.30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

திருக்குறள்

தமிழ் வளர்ச்சித் துறையில் ஆண்டுதோறும் 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். இந்தப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் திறனறிக் குழு உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டு பரிசுக்குப் பரிந்துரை செய்யப்படுவர்.

தகுதி

மாணவர்கள் 1330 குறள்களையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாகவும், குறளின் பொருளையும் அறிந்து இருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும். ஏற்கனவே பரிசுபெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது. விண்ணப்பப் படிவங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்தில் (tamilvalarchithurai.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள், படிவத்தை பூர்த்தி செய்து தாங்கள் படிக்கும் பள்ளிகளில் இருந்து உரிய அனுமதிச் சான்றிதழ் பெற்று, 3 புகைப்படங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்துக்கு 31.10.2023-க்குள் அனுப்பவேண்டும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்து உள்ளார்.


Next Story