தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம்
தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த பரதராமி கிராமத்தில் நெடுஞ்சாலை ஓரம் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தின் போது மின் கம்பம், மின் பாதை செல்லும் நிலங்கள், பயிர், மரம், கிணறு, ஆழ்துளை கிணறு, கட்டிடங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு 2.45 சதவீதத்திற்கு பதில் 10 மடங்கு உயர்த்தி இழப்பீடு வழங்க வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்டுள்ள 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையினை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story