கால்நடைத்துறை சார்பில் வெறிநோய் தடுப்பூசி முகாம்
கம்பத்தில் கால்நடைத்துறை சார்பில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
தேனி
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு, இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் கம்பத்தில் நடைபெற்றது. முகாமில் 200-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. முன்னதாக கால்நடை டாக்டர் ராஜமோகன் பரமசிவம் வெறிநோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் வழங்கினார். இதில் கால்நடை ஆய்வாளர் ராமர், தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story