பல்வேறு துறைகளின் சார்பில்137 பேருக்கு ரூ.58 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்


பல்வேறு துறைகளின் சார்பில்137 பேருக்கு ரூ.58 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்
x

பல்வேறு துறைகளின் சார்பில் 137 பேருக்கு ரூ.58 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

ஈரோடு

பல்வேறு துறைகளின் சார்பில் 137 பேருக்கு ரூ.58 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாசலம், சரஸ்வதி, மாநகராட்சி மேயர் நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 137 பேருக்கு ரூ.58 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன்படி சத்தியவாணி முத்து அம்மையார் இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பில் 75 பேருக்கு தையல் எந்திரமும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், பணியின்போது இறந்த 7 கட்டுமான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.35 லட்சமும், வருவாய்த்துறையின் சார்பில் 32 பேருக்கு ரூ.11 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களும், தாட்கோ மூலம் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரிய உறுப்பினர்கள் இயற்கை மரணம் அடைந்ததற்கான நிவாரண தொகையாக 3 பேருக்கு தலா ரூ.25 ஆயிரமும், ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் 3 விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய டிராக்டரும் வழங்கப்பட்டன.

உரிமைத்தொகை

முன்னதாக அமைச்சர் சு.முத்துசாமி பேசும்போது, 'பெண்கள் முன்னேற்றத்திற்காக மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயணம், அரசு பள்ளிக்கூடங்களில் படித்து முடித்து கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்குதல் ஆகிய திட்டங்கள் மூலம் பெண் கல்வி சதவீதம் அதிகரித்து வருகிறது. மறைந்த முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15-ந்தேதி அன்று குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகையாக மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்' என்றார்.

இதில் கூடுதல் கலெக்டர் நாரணவ்ரே மனிஷ் சங்கர்ராவ், மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் குமரன், அலுவலக மேலாளர் பாலசுப்ரமணியம், மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Related Tags :
Next Story