பெருந்துறை அருகே சரளையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா பந்தல் அமைக்கும் பணி தீவிரம்


பெருந்துறை அருகே சரளையில்  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா பந்தல் அமைக்கும் பணி தீவிரம்
x

பெருந்துறை அருகே சரளையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறை அருகே சரளையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பிரமாண்ட பந்தல்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வருகிறார். பெருந்துறை - கோவை ரோட்டில் சிப்காட் அருகேயுள்ள சரளையில் நடக்கும் அரசு விழாவில் அவர் கலந்து கொண்டு அரசு திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இதற்காக சரளையில் விழா நடக்கும் மைதானத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. பந்தலுக்குள் மேடை அமைக்கும் பணியும், விழாவிற்கு வரும் பொது மக்கள், கட்சியினர், அரசு அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் அமருவதற்கு ஆயிரக்கணக்கான இருக்கைகளும் கொண்டு வரப்பட்டுள்ளன.

80 ஆயிரம் பேர்...

விழா பந்தல் 3 கூடாரங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பந்தலுக்குள் 80 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட உள்ளது.

நாளை நடைபெறும் விழா ஏற்பாடுகளை அமைச்சர் முத்துசாமி மற்றும் பெருந்துறை ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் கே.பி.சாமி (தெற்கு), பி.சின்னச்சாமி (வடக்கு) ஆகியோர் செய்து வருகிறார்கள்.

முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், போலநாய்க்கன்பாளையம் ஊராட்சி சம்பளக்காட்டுப்புதூரில் அமைக்கப்பட்டுள்ள அத்திக்கடவு- அவினாசி திட்டத்தின் நீரேற்று நிலையத்தை பார்வையிடுகிறார்.


Next Story