குலசேகரன்பட்டினம் கடற்கரை சாலையில் பிறந்து 15 நாட்கள் ஆன பச்சிளங்குழந்தை மீட்பு


குலசேகரன்பட்டினம் கடற்கரை சாலையில்  பிறந்து 15 நாட்கள் ஆன  பச்சிளங்குழந்தை மீட்பு
x
தினத்தந்தி 6 Oct 2022 12:15 AM IST (Updated: 6 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் கடற்கரை சாலையில் பிறந்து 15 நாட்கள் ஆன பச்சிளங்குழந்தை மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி

உடன்குடி:

குலசேகரன்பட்டினம் கடற்கரை சாலையில் பிறந்து 15 நாட்கள் ஆன பெண்குழந்தையை விட்டுச்சென்ற கல்மனம் கொண்ட தாயை ேபாலீசார் தேடிவருகின்றனர்.

தசரா திருவிழா

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நடந்து வருகிறது. 10-ம் திருநாளான நேற்று நள்ளிரவு இரவு 12 மணிக்கு மிகிஷாசூரசம்காரம் நடந்ததை முன்னிட்டு பல்லாயிரக்கண்கான பக்தர்கள் லட்சக்கணக்கான பக்தர்கள்குலசேகரன்பட்டினம் கோவில், கடற்கரையில் குவிந்திருந்தனர்.

சாலையில் பச்சிளங்குழந்தை

இந்நிலையில கோவிலில் இருந்து கடற்கரை செல்லும் வழியில் உள்ள மாடசாமிபுரம் சாலையில் பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை துணியில் சுற்றி யாரோ விட்டுச்சென்றிருந்தனர். குழந்தையின் அழுகுரல் கேட்டு, அந்த வழியாக சென்ற பக்தர்கள்108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை மீட்ட செவிலியர்கள், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீ சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், அந்த பச்சிளம் பெண்குழந்தையை சாலையில் விட்டுச் சென்ற தாயை போலீசார் தேடி வருகின்றனர்,


Next Story