குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்தவிழிப்புணர்வு கூட்டம்
தேனி
ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஏத்தக்கோவில் கிராமத்தில் 'குழந்தை திருமணம் இல்லாத ஊராட்சியை உருவாக்குவோம்' என்ற நோக்கத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. தேனி மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் இந்த கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் குடும்ப நல ஆலோசகர் முருகேஸ்வரி கலந்து கொண்டு பேசினார்.
குழந்தை திருமணத்தை தடுப்போம் என்று ஏத்தக்கோவில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் பேசினார். இந்த கூட்டத்தில் ஏத்தகோவில் கிராம மக்கள் கலந்து கொண்டனர். மேலும் இளம் வயது திருமணம் நடக்காமல் தடுப்போம் என்று உறுதிமொழி எடுத்தனர். குழந்தை திருமணத்தை தடுக்க கிராம அளவில் கண்காணிப்பு குழு அமைக்கப்படும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story