சூரம்பட்டி நால்ரோட்டில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சூரம்பட்டி நால்ரோட்டில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.
ஈரோடு
ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் தமிழ் மொழியை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். டாக்டர் சி.சரஸ்வதி எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் கோஷங்களாக எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா கட்சி முக்கிய நிர்வாகிகள் அக்னி எம்.ராஜேஸ், நா.விநாயகமூர்த்தி, குளூர் தங்கராஜ், சிவக்குமார், செந்தில் குமார், சிவசாமி, செந்தில், சிவகாமி, ஈஸ்வரமூர்த்தி வேதாந்தம், பாலகுமார், பன்னீர்செல்வம், ஈஸ்வரமூர்த்தி, நல்லசிவம், ரவிநாத், மகேஷ், பூபதி, சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story