பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு
பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திரும்ப முடியாமல் நின்ற லாரி
கர்நாடக மாநிலம் குடகு மலையில் இருந்து சேலத்துக்கு மர பாரம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதையில் 2-வது கொண்டை ஊசி வளைவில் நேற்று பகல் 11 மணி அளவில் சென்றபோது திரும்ப முடியாமல் லாரி நின்றது.
இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. ஈரோடு மாவட்டத்தில் இருந்து அந்தியூர் வழியாக கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் கார், பஸ், லாரி, வேன், கனரக வாகனங்கள் போன்ற வாகனங்களும், அதேபோல் அங்கிருந்து தமிழகம் வந்த வாகனங்களும் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.
போக்குவரத்து பாதிப்பு
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் மற்றும் வனத்துறையினர் அங்கு விரைந்தனர். பின்னர் போக்குவரத்தை போலீசார் ஒழுங்குப்படுத்தினார்கள். பின்னர் லாரியில் இருந்த மரக்கட்டைகளை இறக்கி லாரியை திருப்பி விட்டனர். அதன்பின்னரே போக்குவரத்து நிலைமை சீராகியது. மற்ற வாகனங்கள் அங்கிருந்து சென்றன.
பர்கூர் மலைப்பாதையில் லாரி திரும்ப முடியாமல் நின்றதால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணிகள் குடிநீரின்றி அவதிப்பட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, 'இதே இடத்தில் அடிக்கடி இதுபோன்ற வாகன விபத்துகள் நடந்து வருகின்றன. பொதுமக்களின் நலன் கருதி கனரக வாகனங்களை மலைப்பகுதியில் விடாமல் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.