குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கார் கவிழ்ந்தது; 3 பேர் காயம்


குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கார் கவிழ்ந்தது; 3 பேர் காயம்
x

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கார் கவிழ்ந்தது. 3 பேர் காயம் அடைந்தனர்.

நீலகிரி

குன்னூர்

நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு குன்னூர் மற்றும் கோத்தகிரி சாலை வழியாக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. இதனால் இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். மேலும் யானைகள் நடமாட்டம் இருப்பதால் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சாலையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் வேகத்தடைகள் அமைக்க பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து செல்கின்றன.

இந்த நிலையில் மேட்டுப்பாளையம் -குன்னூர் சாலையில் மாலை 5 மணியளவில் கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட கார் ஒன்று அந்த வழியாக வந்தது. அப்போது திடீரென நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காருக்குள் இடிபாடுகளில் சிக்கி காரில் இருந்த 3 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் குன்னூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் கிரேன் மூலம் அங்கிருந்து கார் அகற்றப்பட்டது. விபத்து குறித்து குன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story