புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஊட்டி
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புரட்டாசி சனிக்கிழமை
புரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாகும். இந்த தினத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பெரும்பாலும் இந்த புரட்டாசி மாதம் முழுவதும் இந்து மக்கள் சாத்விக உணவுகளை மட்டுமே உண்பார்கள். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் தங்களால் இயன்ற அளவுக்குப் பெருமாளுக்குப் படையல் போடுவர். வீட்டில் கோவிந்தா கோஷமிட்டு வேங்கடவனை வழிபடுவர். ஒரு சிலர் திருப்பதிக்கு இந்த புரட்டாசி மாதத்தில் சென்று வருவதும் உண்டு.
சாமி தரிசனம்
இதன்படி நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், கோத்தகிரி, ஊட்டி, குன்னூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று காலை முதல் பக்தர்கள் படையெடுத்த வண்ணம் இருந்தனர். ஊட்டி மார்க்கெட் பகுதியில் உள்ள வேணுகோபாலசுவாமி எச்.பி.எப். பகுதி பாலாஜி கோவில் உள்பட பல்வேறு பெருமாள் கோவில்களுக்கு பொதுமக்கள் சென்று வழிபட்டனர்.
ஊட்டி வேணுகோபால சுவாமி மற்றும் சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.