ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையைெயாட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது
ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையைெயாட்டி, கம்பம் அருகே சாமாண்டிபுரத்தில் உள்ள சாமாண்டியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு மஞ்சள், இளநீர், தயிர், பச்சரிசிமாவு உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
போடியில் சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் பத்மாவதி தாயார் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். கூடலூர் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பால் தாய் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அம்மனுக்கு பால், மஞ்சள், பன்னீர், தேன், சந்தனம், இளநீர், தயிர், பச்சரிசி மாவு உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதி்ல் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.