சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சங்கராபுரம் முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை


சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு  சங்கராபுரம் முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 6 May 2023 12:30 AM IST (Updated: 6 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சங்கராபுரம் முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்.

சங்கராபுரம் முதல் பாலமேட்டில் உள்ள காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு விளக்கு பூஜை நடைபெற்றது.முன்னதாக காமாட்சி அம்மன், ஏகாம்பரேஸ்வரருக்கு வேதகோஷங்கள் முழங்க பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் நடைபெற்ற விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story