போதை விழிப்புணர்வு தினத்தையொட்டி மாணவர்கள், ஆட்டோ டிரைவர்கள் ஊர்வலம்- போலீஸ் துணை கமிஷனர்கள் தொடங்கி வைத்தனர்
போதை விழிப்புணர்வு தினத்தையொட்டி மாணவர்கள், ஆட்டோ டிரைவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை போலீஸ் துணை கமிஷனர்கள் தொடங்கி வைத்தனர்.
போதை விழிப்புணர்வு தினத்தையொட்டி மாணவர்கள், ஆட்டோ டிரைவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை போலீஸ் துணை கமிஷனர்கள் தொடங்கி வைத்தனர்.
போதைப்பொருள் ஒழிப்பு தினம்
உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு மதுரை மாநகர போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர். அதில் தமுக்கம் மைதானம் சந்திப்பில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. அதை தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் போதை விழிப்புணர்வு குறித்து வாசகங்களுடன் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. போதையின் விபரீதத்தை மக்கள் அறியும் வண்ணம் புகைப்படங்கள் கண்காட்சி அடங்கிய அரசு பஸ் அந்த பகுதியில் வலம் வந்தது.
விழிப்புணர்வு ஊர்வலத்தை மாநகர தலைமையிட துணை கமிஷனர் மங்களேஸ்வரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் துணை கமிஷனர்கள் ஆறுமுகசாமி, அரவிந்த், பிரதீப், கூடுதல் துணை கமிஷனர் திருமலைக்குமார், உதவி கமிஷனர்கள் செல்வின், மாரியப்பன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் தங்கமணி, ரமேஷ்குமார், கார்த்திக், சுரேஷ், தங்கமணி, நந்தகுமார், கணேஷ்ராம், தங்கப்பாண்டி, ஷோபனா, பஞ்சவர்ணம், பூர்ணகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அனைத்து ஆட்டோ டிரைவர்களும், மாணவர்களும் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி மேற்கொண்டனர்.
இதேபோன்று மதுரை ரெயில் நிலையம் முன்பு போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில் ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது இனி போதை பொருட்களை பயன்படுத்த மாட்டேன் என்று அங்கு அறிவிப்பு பலகையில் கையெழுத்து போட்டு பலர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் துணை கமிஷனர் பிரதீப் தொடங்கி வைக்க உதவி கமிஷனர் மகேஷ், இன்ஸ்பெக்டர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் பெரியார் பஸ் நிலையத்தில் திடீர்நகர் காசி தலைமையில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டமும், சமூக பணித்துறை மற்றும் திருப்பரங்குன்றம் போலீஸ் நிலையமும் சார்பில் போதை ஒழிப்பு பேரணி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.விழிப்புணர்வு பேரணியானது திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருப்பரங்குன்றம் போலீஸ் நிலையம் வரை விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியில் 150-க் கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும், சமூக பணித்துறை மாணவர்களும் கலந்து கொண்டனர். இதனையடுத்துமன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் காவல்துறை துணை ஆணையாளர் குருசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.. நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் விஜயராகவன், கல்லூரி தலைவர் ராஜகோபால், முதல்வர் ராம சுப்பையா, இயக்குனர் பிரபு மற்றும் சமூகப் பணித்துறை தலைவர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.