தசரா திருவிழாவை முன்னிட்டு பிரமாண்ட அம்மன் சிலைகள் அமைப்பு
தசரா திருவிழாவை முன்னிட்டு உடன்குடி பகுதியில் பிரமாண்ட அம்மன் சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி
உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள தாண்டவன்காடு, தெற்குதாண்டவன்காடு, ஞானியார்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் பிரம்மாண்டமாக அம்மன், சுவாமி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அம்மன் கண்களை திறந்து மூடுவதும், எழுந்து ஆசீர்வாதம் வழங்குவது போன்றும், பக்தர்களுக்கு எலுமிச்சை கனி வழங்குவது போன்றும், காளி கைகளை மேலும் கீழும் உயர்த்தி ஆசீர்வதிப்பது போன்ற பல்வேறு அசைவுகளில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை பார்ப்பதற்காக ஏராளமான கிராம பகுதி மக்கள், தசரா பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்கின்றனர்.
Related Tags :
Next Story