காந்தி ஜெயந்தியை முன்னிட்டுஅனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தகவல்


காந்தி ஜெயந்தியை முன்னிட்டுஅனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தகவல்
x

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தொிவித்தாா்

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

கிராம சபை கூட்டம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தி தினமான வருகிற அக்டோபர் மாதம் 2-ந்தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம், ஆகியவை தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறப்படுகிறது. ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் மற்றும் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும்.

பற்றாளர்கள் நியமனம்

மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், பிரதமமந்திரி குடியிருப்பு திட்டம், 2023-2024-ம் ஆண்டுக்கான சமூக தணிக்கை செயல் திட்டத்தினை பொதுமக்களுக்கு அறிவித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை பார்வைக்கு ஒப்புதல் பெறுதல், மக்கள் திட்டமிடல் இயக்கம் குறித்தும், காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல் மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட கூட்டப்பொருட்கள் விவாதிக்கப்படுகிறது.

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் முறையாக நடைபெறுவதை கண்காணிக்கும் பொருட்டு வட்டார அளவில் உதவி இயக்குனர் நிலையில் பற்றாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியிருந்தார்.


Next Story