சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவையொட்டி இல்லந்தோறும் தேசிய கொடி ஏற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம்


சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவையொட்டி  இல்லந்தோறும் தேசிய கொடி ஏற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம்
x

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி இல்லந்தோறும் தேசியகொடி ஏற்றுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி இல்லந்தோறும் தேசியகொடி ஏற்றுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது, "75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவை மாநில அளவிலும், தேசிய அளவிலும் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து வீடுகளிலும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 11-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் இதுகுறித்து உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றுவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணி, பெரியகுளம் ஆர்.டி.ஓ. சிந்து மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story