கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டிகிடா முட்டு சண்டை


கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டிகிடா முட்டு சண்டை
x
தினத்தந்தி 12 Jun 2023 12:15 AM IST (Updated: 12 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் மைதானத்தில் கிடா முட்டு சண்டை நேற்று நடந்தது.

தேனி

கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் மைதானத்தில் கிடா முட்டு சண்டை நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தேனி தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்ன சபாபதி, வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா சசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 50 ஜோடி கிடாய்கள் களம் இறக்கப்பட்டன. அவை ஒன்றுக்கொன்று ஆக்ரோஷமாக மோதி சண்டையிட்டன. பின்னர் பரிசு வழங்கும் விழா நடந்தது. இதில் பேரூராட்சி தலைவர் கீதா சசி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை வீரபாண்டி பேரூர் தி.மு.க. செயலாளர் செல்வராஜ் செய்திருந்தார்.


Next Story