மகாவீர் ஜெயந்தியையொட்டிடாஸ்மாக் கடைகளுக்கு 4-ந்தேதி விடுமுறை
மகாவீர் ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 4-ந்தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
வருகிற 4-ந் தேதி மகாவீர் ஜெயந்தி தினம். இதையொட்டி அன்று ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைகள், அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் மதுபான உரிமதலங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால் அன்றைய தினத்தில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது. மேலும் அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story